உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் பஸ் மோதி பி.டி.ஓ., ஆபீஸ் சுற்றுச்சுவர் சேதம்

மதுராந்தகத்தில் பஸ் மோதி பி.டி.ஓ., ஆபீஸ் சுற்றுச்சுவர் சேதம்

மதுராந்தகம்: புதுக்கோட்டையில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி, நேற்று முன்தினம் இரவு, 30க்கும் மேற்பட்ட பயணியருடன் அரசு பேருந்து ஒன்று சென்றது. மதுராந்தகம் அருகே சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5:00 மணியளவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலையில் உள்ள தடுப்புகளை உடைத்துக் கொண்டு, மதுராந்தகம் பி.டி.ஓ., அலுவலகத்தின் சுற்றுச்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் உட்பட பயணியர் அனைவரும், சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த விபத்து நடந்த பகுதியில் பாலப் பணிகள் நடைபெற்று வருவதாலும், குறுகிய சாலையாக உள்ளதாலும், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால், சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து, மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை