உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்த நிழற்குடை

இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்த நிழற்குடை

கூடுவாஞ்சேரி:நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி , கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலை மின்வாரிய அலுவலகம் அருகில் பேருந்து நிறுத்த நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால்,கட்டடங்களில் பல இடங்களில் விரிசல் அடைந்து, சிறுக சிறுக உடைந்து விழுந்து வருகிறது. பேருந்து நிறுத்தத்தில் வடக்கு பக்கத்தில் உள்ள சுவர் பாதி விழுந்த நிலையிலும் மற்ற இடங்களில் அபாயகரமான நிலையில் உள்ளது.பேருந்து நிறுத்த நிழற்குடையை இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டு, புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ