மேலும் செய்திகள்
35 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது
10-Aug-2025
புழல்:புழல் சிறையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இரு கைதிகள் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புழல் சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என, மூன்று பிரிவுகளில், 4,000த் திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் தடை செய்யப்பட்ட கஞ்சா, மொபைல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த, சிறை காவலர்கள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சிறை காவலர்கள் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டபோது, கைதிகள் இருவரது அறையில் பந்து போன்ற பொட்டலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதில், 200 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். சிறை அதிகாரிகள் அளித்த புகாரில், கஞ்சாவை பதுக்கி வைத்த சூர்யா, தேவா ஆகிய இரு கைதிகள் மீது புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
10-Aug-2025