உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரும்பேர்கண்டிகை பள்ளி நுாற்றாண்டு விழா

பெரும்பேர்கண்டிகை பள்ளி நுாற்றாண்டு விழா

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், பெரும்பேர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நுாற்றாண்டு விழா நடந்தது.இந்த நடுநிலைப் பள்ளியில், 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நேற்று முன்தினம், இந்த பள்ளியில் நுாற்றாண்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சாவித்திரி, ஒன்றிய குழுத்தலைவர் கண்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு கவிதைப் போட்டி, பேச்சு, நடனம், விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை