உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்மருவத்துார் பெண்ணிடம் செயின் பறிப்பு

மேல்மருவத்துார் பெண்ணிடம் செயின் பறிப்பு

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலா, 57. இவர், மாத்துார் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், டீச்சராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம், பணி நிமித்தமாக, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் நலத்திட்ட அலுவலகத்தில் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.சோத்துப்பாக்கத்தில், வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு, இரவு 9:00 மணிக்கு, தன் மகள் செல்வபிரதீபாவுடன் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து சென்றார்.அப்போது, சோத்துப்பாக்கம் - வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில், அகிலி பேருந்து நிலையம் அருகே, அடையாளம் தெரியாத ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து, கோகிலா கழுத்தில் அணிந்திருந்த, 2.5 சவரன் தங்கச் செயினை பறித்து தப்பினார்.இதுகுறித்து, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில், நேற்று கோகிலா புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு, மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ