மேலும் செய்திகள்
தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற வீரர்கள்
24-Oct-2025
திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை மைதானத்தில், தமிழ்நாடு மாநில டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், தமிழகம் முழுதும் இருந்து 28 மாவட்டங்களைச் சேர்ந்த, 110 வீரர்கள் பங்கேற்றனர். இதில், 14, 16, 18, வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 தங்கம், 7 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர். இதன் மூலம் மொத்தம் 53 புள்ளிகளைப் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தலைவர் சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் நிர்வாகிகள் செந்தில்குமார், ஸ்ரீதர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
24-Oct-2025