உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; விபத்தில் சாய்ந்த மின் கம்பம் சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்?

செங்கல்பட்டு: புகார் பெட்டி; விபத்தில் சாய்ந்த மின் கம்பம் சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்?

விபத்தில் சாய்ந்த மின் கம்பம் சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்?

சிங்கபெருமாள் பெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் அருகில், சாலையோரம் உள்ள மின் கம்பம், கடந்த வாரம் அடையாளம் தெரியாத வானகம் மோதி சாய்ந்தது.ஆனால், இதுவரை சாய்ந்த மின் கம்பம் சரிசெய்யப்படவில்லை. அதனால், மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மின் கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ப.ஆனந்தன், சிங்கபெருமாள் கோவில்........................திருப்போரூர் கிரிவலப்பாதையில்கழிவுநீர் கால்வாய் மூடி உடைப்புதிருப்போரூர் பேரூராட்சி, கிரிவலப்பாதையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குடியிருப்பு வீடுகள், வணிக கடைகள் உள்ளன. பிரதோஷத்தின் போது பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.மேலும், இச்சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்கின்றனர். இச்சாலை ஓரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்து, அங்கு துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி, பாதுகாப்பு குறித்த சிக்கலும் ஏற்படுகிறது. எனவே, கால்வாய்க்கு புதிய மூடி அமைக்க வேண்டும்.- என்.பிரசாந்த், திருப்போரூர்......................................................பனங்கோட்டூர் தபால் நிலையத்தில்வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல்பேரமனுார், சட்டமங்கலம், பனங்கோட்டூர் ஆகிய கிராமங்களில், அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் தேவைக்காக, பனங்கோட்டூரில் கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த தபால் அலுவலகத்தில், பொதுமக்கள் அமர்ந்து எழுதும் வசதி இல்லை. இதனால், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தோர் சேமிப்பு கணக்கு உள்ளிட்ட தபால் சேவை பணிகளை செய்ய இருக்கை வசதி இல்லை.அதனால், கையொப்பம் இடுதல், எழுதுதல் போன்றவற்றை நின்று கொண்டே எழுத வேண்டிய நிலை உள்ளது. அது மட்டுமின்றி, அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மேல் வைத்துக் கொண்டு எழுதும் அவல நிலை உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கிளை தபால் நிலையத்தில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மூ.சம்பத்து, பேரமனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி