சீரமைப்பு பணியை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
செய்யூர்: செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 'பெஞ்சல்' புயல் காரணமாக, பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததுடன், மின் கம்பங்களும் சேதமடைந்தன.மின்சாரத் துறை அதிகாரிகள் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிட நேற்று, சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் சென்றார்.அப்போது, இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட சேம்புலிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்கம்பங்கள் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, புயல் பாதிப்புகளையும் கேட்டறிந்தார்.பின், சீரமைப்புப் பணிகளை துரிதப் படுத்தி, விரைவில் மின்சாரம் வழங்க மின்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.