மேலும் செய்திகள்
'டெங்கு'வால் சிறுமி உயிரிழப்பு
06-Nov-2024
செய்யூர்:செய்யூர் அடுத்த தேவராஜபுரம் கிராமத்தை சார்ந்த ராஜகுரு மகள் யாத்திகா, 6. இவருக்கு, கடந்த 3ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்ததில், டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்tu சிகிச்சை பெற்று வந்த யாத்திகா, 5ம் தேதி காலை 10:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவம், செய்யூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், செய்யூர் ஊராட்சி மற்றும் செய்யூர் அரசு மருத்துவமனை சார்பாக, ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள், குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில், கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது.மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு செய்யூர், தேவராஜபுரம், பாளையார்மடம் உள்ளிட்ட பகுதியில், நேற்று மருத்துவ முகாம்கள் நடந்தன. இதில், அதிக காய்ச்சல், தலைவலி உள்ள மக்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
06-Nov-2024