குடிமகன்கள் கூடாரமாகும் கடுகுப்பட்டு அரசு பள்ளி
பவுஞ்சூர், பவுஞ்சூர் அடுத்த கடுகுப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது.இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக தொடர்ந்து பள்ளி வளாகத்தில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து, மது அருந்துகின்றனர்.பின், காலி மதுபாட்டில்களை விளையாட்டு மைதானம், வகுப்பறைகள் எதிரே வீசிவிட்டுச் செல்கின்றனர்.இதனால், குடிமகன்கள் வீசிச் செல்லும் மதுபாட்டில்களை, ஆசிரியர்களே பள்ளி வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணித்து, இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.