அரசு பள்ளிகளில் துாய்மை பணி தனியாரிடம் ஒப்படைப்பு
செங்கல்பட்டு, செங்கல்பட்டில் உள்ள அரசு பள்ளிகளில் துாய்மை பணியை, தனியாரிடம் ஒப்படைக்க, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில் அறிஞர் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி நடுநிலைப் பள்ளி, நகராட்சி துவக்கப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கழிப்பறை துாய்மை பணிகளை, நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால், நகராட்சியில் துாய்மை பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள ஊதியத்தில் தனியார் துாய்மை பணியாளர்களை நியமித்து, அரசு பள்ளிகளில் கழிப்பறை துாய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவினத்தை, நகராட்சி வசூலிக்கும் கல்வி வரியிலிருந்து ஈடுகட்டலாம் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி செங்கல்பட்டு நகராட்சி, அரசு பள்ளிகளில் கழிப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை துாய்மை செய்யும் பணிகளை, 15 துாய்மை பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ள, ஒரு தனியார் நிறுவனத்திற்கு, அடுத்தாண்டு மே மாதம் வரை அனுமதி வழங்கப்படுகிறது.இதற்கான செலவினம் 28 லட்சம் ரூபாய்க்கு அனுமதி வழங்க, செங்கல்பட்டு நகராட்சி கூட்டத்தில், தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. துார்வார நிதி செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே.நகர், வேதாசலம் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழைநீர் கால்வாய்கள் உள்ளன. இப்பகுதியில், வடகிழக்கு பருவ மழையையொட்டி, வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேங்காமல் இருக்க, பிரதான மழைநீர் கால்வாய்களை துார்வார வேண்டுமென, நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜே.சி.கே.நகர், வேதாசலம் நகர், ராகவனார் தெரு, அனுமந்தபுத்தேரி, அண்ணா நகர் ரயில்வே கால்வாய் உள்ளிட்ட மழைநீர் கால்வாய்கள் துார் வாரி சீரமைக்க, 11 லட்சம் ரூபாய் ஒதுக்கி, 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக பணிகளை முடிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இப்பணியை செயல்படுத்த, நகராட்சி பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்க, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது. மழைநீர் கால்வாய் துார்வாரும் பணிகளை, மழைக் காலத்திற்கு முன் துவக்கி, முறையாக சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மழைநீர் கால்வாய் துார்வார நிதி செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே.நகர், வேதாசலம் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழைநீர் கால்வாய்கள் உள்ளன. இப்பகுதியில், வடகிழக்கு பருவ மழையையொட்டி, வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேங்காமல் இருக்க, பிரதான மழைநீர் கால்வாய்களை துார்வார வேண்டுமென, நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜே.சி.கே.நகர், வேதாசலம் நகர், ராகவனார் தெரு, அனுமந்தபுத்தேரி, அண்ணா நகர் ரயில்வே கால்வாய் உள்ளிட்ட மழைநீர் கால்வாய்கள் துார் வாரி சீரமைக்க, 11 லட்சம் ரூபாய் ஒதுக்கி, 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக பணிகளை முடிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இப்பணியை செயல்படுத்த, நகராட்சி பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்க, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது. மழைநீர் கால்வாய் துார்வாரும் பணிகளை, மழைக் காலத்திற்கு முன் துவக்கி, முறையாக சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.