உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விரைவு ரயில் மோதி கல்லுாரி மாணவி பலி

விரைவு ரயில் மோதி கல்லுாரி மாணவி பலி

பல்லாவரம்:பல்லாவரம் அருகே, விரைவு ரயில் மோதி, கல்லுாரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமமாலினி, 18. வண்டலுார் அடுத்த ரத்தனமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல், கல்லுாரி முடிந்து, ரயில் மூலம் வீட்டிற்கு வந்தார். திரிசூலம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, தண்டவாளம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை நோக்கி வந்த 'வைகை எக்ஸ்பிரஸ்' ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, தாம்பரத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை