உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு

இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு

அச்சிறுபாக்கம்:இரட்டைமலை சீனிவாசனின் 79வது நினைவு நாளையொட்டி, அச்சிறுபாக்கத்தில் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோழியாளம் கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். சமூக செயல்பாட்டாளரான இவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவர். இவரது பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அவரின் 79வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு, பா.ஜ., கட்சியைச் சேர்ந்த செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார் தலைமையில், அச்சிறுபாக்கம் முன்னாள் ஒன்றிய தலைவர் பெருமாள் ஏற்பாட்டில், பா.ஜ.,வினர், மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை