பஸ் நிலையம் அருகே கழிவுநீர் தேங்குவதால் பயணியர் அவதி
திருப்போரூர்: கேளம்பாக்கத்தில், நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்பதால், பேருந்து பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி அருகே, பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, பள்ளி மாணவர்கள், மற்ற பகுதிகளுக்குச் செல்லும் பயணியர், நிறுத்தத்தில் நின்று பேருந்தில் ஏறிச் செல்கின்றனர். நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் அருகே, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும், சாலையோரமும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், மாணவர்கள் சிரமப்படுவதுடன், கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், மேற்கண்ட இடத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க, நெடுஞ்சாலை ஓரம் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.