மேலும் செய்திகள்
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
30-Oct-2025
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பெரிய தெருவில், தனியார் ஹோமியோபதி கிளினிக் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இங்கு, அலோபதி மருத்துவ சிகிச்சையும் அளித்து வந்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து, சுகாதார துறைக்கு புகார் வந்தததால் நேற்று முன்தினம், சுகாதார பணிகள் இணை இயக்குநர் மலர்விழி, சோதனை நடத்தினார். அப்போது, சிறுவனுக்கு அலோபதி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர் ஜெயக்குமாரிடம், அவர் படித்த மருத்துவ சான்றிதழ்களை கேட்டுள்ளார். ஆனால், இரண்டு மணி நேரம் காக்க வைத்தும், சான்றிதழ்களை அளிக்காமல் தாமதப்படுத்தியுள்ளார். இதையடுத்து இணை இயக்குநர், திருக்கழுக்குன்றம் போலீசில், ஜெயக்குமார் மீது புகார் அளித்தார். தலைமறைவான ஜெயக்குமாரை, போலீசார் தேடுகின்றனர்.
30-Oct-2025