உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புகார் பெட்டி திம்மாவரம் தெரேசா நகரில் சாலையை சீரமைக்க கோரிக்கை

புகார் பெட்டி திம்மாவரம் தெரேசா நகரில் சாலையை சீரமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் ஊராட்சியில், அன்னை தெரேசா நகரில், நுாறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள. இங்குள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால், மழைக்காலங்களில் கழிவு நீருடன் மழைநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தியாகும் இடமாக மாறி, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.முருகன், திம்மாவரம்.சாலையின் இருபுறமும் முட்செடிகள்வாகன ஓட்டிகளுக்கு பாதிப்புமாமல்லபுரத்தில் உள்ள அண்ணா நகர் பகுதிவாசிகள், பூஞ்சேரி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மாணவ - மாணவியர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கும், மற்ற தேவைகளுக்கும் செல்கின்றனர்.இங்குள்ள பொதுப்பணித் துறை சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்று திரும்புகின்றனர். தனி வாகனத்தில் வரும் சுற்றுலா பயணியரும், இவ்வழியில் செல்கின்றனர்.குறுகிய சாலையின் இருபுறமும், முட்செடிகள் வளர்ந்து, சாலையின் மைய பகுதி வரை நீண்டுள்ளது. இருசக்கர வாகன பயணியரை, முட்செடிகள் கிழித்து காயமடைகின்றனர்.எதிரில் வரும் வாகனத்திற்காக ஒதுங்க இடமின்றி புதரில் சிக்குகின்றனர். பேரூராட்சி நிர்வாகம், முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.முனுசாமி, மாமல்லபுரம்.நெல்லிக்குப்பம் பிரதான சாலையில்விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சியில் இருந்து, கல்வாய் செல்லும் நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், இருபுறமும் தெருவிளக்குகள் இல்லை.மேலும், இங்கே இரவு நேரத்தில் சாலையில் மாடுகள் தஞ்சம் அடைவதால், இருசக்கர வாகனத்தில் வருவோர், இருளில் தெரியாமல் அவற்றின் மீது மோதி விபத்துகளில் சிக்குகின்றனர்.எனவே, இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, தெருவிளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.பாலாஜி, கல்வாய்.பள்ளி நுழைவு பகுதியில்அகற்றப்படாத பேனரால் அவதிசெங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கம் பழைய ஜி.எஸ்.டி., சாலையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர்.இந்த பள்ளி நுழைவு பகுதியில், தனியார் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர பேனர், பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் போது, பேனர் அசைவதால், எப்போது வேண்டுமானாலும் கிழே விழும் அபாயம் உள்ளது.எனவே, இந்த பேனரை அகற்ற, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா.ஜெகதீசன், செங்கல்பட்டு.சாலை வளைவு பகுதியில்பள்ளத்தால் விபத்து அபாயம்பவுஞ்சூர் அடுத்த விழுதமங்கலம் கூட்டு சாலையில் இருந்து, அரியனுார் செல்லும் தார் சாலை உள்ளது. அந்த சாலையில், தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.சாலை வளைவுப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு, சேதமடைந்து உள்ளதால், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சாலையோர பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.தட்சணாமூர்த்தி, பவுஞ்சூர்.மின் மோட்டார் பழுதுசீரமைக்க வேண்டுகோள்நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கே.கே.நகர் முதலாவது பிரதான சாலையில், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு, அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக நீர் நிரப்பப்படுகிறது.அதிலிருந்து, அப்பகுதிவாசிகள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, சில நாட்களாக அந்த மின் மோட்டார் பழுதடைந்து உள்ளது. அதனால், அப்பகுதிவாசிகள் குடிநீர் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.எனவே, பழுதான மின் மோட்டாரை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.கன்னிகா, கூடுவாஞ்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ