உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுவர் விளம்பரம் அழிப்பு வி.சி., சார்பில் புகார்

சுவர் விளம்பரம் அழிப்பு வி.சி., சார்பில் புகார்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே மேம்பாலத்தில், வி.சி., சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் டிச., 17ம் தேதி வருவதையொட்டி, சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டன.இந்த சுவர் விளம்பரங்களை, முன்னாள் மத்திய மாவட்ட செயலர் தமிழரசன் செய்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சுவர் விளம்பரங்களில், மர்ம நபர்கள் கருப்பு மை ஊற்றி அழித்திருந்தனர்.இது குறித்து, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில், மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழரசன் புகார் அளித்தார்.இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ