உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாமரைக்குளம் சீரமைப்பு பணி தரமற்ற முறையில் நடப்பதாக புகார்

தாமரைக்குளம் சீரமைப்பு பணி தரமற்ற முறையில் நடப்பதாக புகார்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட தாமரைக்குளம் சீரமைக்கும் பணி, தரமற்ற முறையில் நடப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அம்ரித் 2.0 திட்டத்தில், நகர்ப்புறங்களில் நீர்நிலைகள் மற்றும் பசுமைப் பகுதிகளைப் புனரமைத்து மேம்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட தாமரைக்குளம் 53 லட்சம் ரூபாயில் துார்வாருதல், மண் கரை கட்டுதல், நடைபாதை, சிமெண்ட் கல் பதித்தல், மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த, 2023ல், பணிகள் துவங்க டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த நிறுவனம் பணிகளை துவக்காததால், மீண்டும் 2024ல், மறு ஒப்பந்தம் விடப்பட்டது. அதன்படி, பணிகள் செய்ய ஒப்புதல் பெறப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலமாக தாமரைக்குளம் பகுதியில் இருந்த மீன் கடைகள் அகற்றப்பட்டு, குளம் துார்வாருதல், சிமென்ட் கல் பதிக்க பணிகள் துவங்கப்பட்டன. தற்போது,குளம் துார் வாருதல் பணி மேற்கொள்ளாமல், குளத்தின் உள் பகுதியைச் சுற்றி சிமென்ட் கான்கிரீட் கரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபாதையில் சிமென்ட் கல் பதிக்கும் பணி தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கலெக்டர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேரூராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை