உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போக்குவரத்து சிக்னல் இல்லாததால் வண்டலுார், ஊரப்பாக்கத்தில் நெரிசல்

போக்குவரத்து சிக்னல் இல்லாததால் வண்டலுார், ஊரப்பாக்கத்தில் நெரிசல்

கூடுவாஞ்சேரி:வண்டலுார், அண்ணா உயிரியல் பூங்கா அருகில், மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்து சிக்னல் உள்ளது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வரும் வாகனங்களும், இடது புறமாக கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் செல்லும் வாகனங்களும், வலது புறமாக மண்ணிவாக்கம், படப்பை, தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்களும் சிக்னல் படி செல்கின்றன. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள், வலது புறமாக கேளம்பாக்கம் செல்லும் வாகனங்கள், நேராக தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள் நெரிசலின்றி சென்றன. ஆனால், வண்டலுாரில் பொருத்தப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் பழுதடைந்து, சில காலமாக செயல்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் அத்துமீறி செல்கின்றனர்.அதேபோல, ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னலும் இயங்கவில்லை. இதனால், தினசரி நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:வண்டலுார் மற்றும் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படவில்லை. அதை பழுது நீக்கி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ