உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்தலசயனர் பார்வேட்டை உற்சவம் குறித்து ஆலோசனை

ஸ்தலசயனர் பார்வேட்டை உற்சவம் குறித்து ஆலோசனை

மாமல்லபுரம், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், பார்வேட்டை உற்சவம் செல்வது குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், பிரசித்தி பெற்றது. வைணவ சமய 108 திவ்ய தேச கோவில்களில், 63வதாக சிறப்பு பெற்றது.ஸ்தலசயன பெருமாள் உற்சவங்களில், பார்வேட்டை குறிப்பிடத்தக்கது. காணும் பொங்கலன்று, உற்சவ உலகுய்யநின்ற நாயனார், கோவிலிலிருந்து புறப்பட்டு, பெருமாளேரி, வடகடம்பாடி, காரணை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக உலா சென்று, குழிப்பாந்தண்டலத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலை அடைவார்.அங்கு முயல் வேட்டையாடி பார்வேட்டை உற்சவம் கண்டு, மறுநாள் மாமல்லபுரம் கோவிலை அடைவார். கடந்த 2021ல் கொரோனா வைரஸ் பரவல், அதைத்தொடர்ந்து கோவில் திருப்பணிகள் காரணமாக, நான்காண்டாக இந்த உற்சவம் நடத்தப்படவில்லை.கடந்த பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், தற்போது காணும் பொங்கல் நாளான, ஜன., 16ம் தேதி உற்சவம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.செயல் அலுவலர் செல்வகுமார், மீண்டும் பார்வேட்டை உற்சவம் துவங்குவது, அதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து நேற்று அர்ச்சகர்கள், சுவாமி உலா கிராமத்தினர் உள்ளிட்டோருடன் ஆலோசித்தார்.உற்சவ நாளில் காலை 4:00 மணிக்கு சுவாமி புறப்படுவது, அவர் உலா செல்லும் கிராமங்களில், குறிப்பிட்ட நேரத்திற்குள் தாமதமின்றி அர்ச்சித்து வழிபட்டு, குழிப்பாந்தண்டலம் கோவில் உச்சிக்கால பூஜை நேரத்திற்குள் சென்றடைவது, பிற ஏற்பாடுகள் குறித்து, விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை