உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூட்டுறவு பணியிட விண்ணப்பதாரர் ஹால் டிக்கட் பதிவிறக்க அறிவிப்பு

கூட்டுறவு பணியிட விண்ணப்பதாரர் ஹால் டிக்கட் பதிவிறக்க அறிவிப்பு

மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையத்தில் பதிவிறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடைகள் இயங்குகின்றன. இச்சங்கங்களில், விற்பனையாளர், பொட்டலம் கட்டுநர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக, ஊழியர்கள் நியமிக்க முடிவெடுக்கப்பட்டு, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் 11ம் தேதி தேர்வு நடக்கிறது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டை, செங்கல்பட்டு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய https://www.drbcgl.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்குமாறும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ