மேலும் செய்திகள்
செங்கையில் அரசு பஸ் மோதி கல்லுாரி மாணவர் பலி
09-Jun-2025
செங்கல்பட்டு:தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ், 27. செங்கல்பட்டு அடுத்த திருவடிசூலம் கிராமத்தில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி, கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, தன் மனைவி தீபா, 24, என்பவருடன் 'டி.வி.எஸ்., அப்பாச்சி' பைக்கில், திருவடிசூலத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றார்.புலிக்குடிவனம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் சென்றபோது, தங்கராஜை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள், அவரது தலையில் கத்தியால் தாக்கி, 9,500 ரூபாய் மற்றும் மொபைல்போன், தீபா கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் தங்க தாலியை பறித்துச் சென்றனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், தம்பதியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
09-Jun-2025