உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்குவாரி லாரி ஏறி பசு பலி

கல்குவாரி லாரி ஏறி பசு பலி

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த காட்டுதேவாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் குண சேகர், 57; விவசாயி. இவர், நேற்று காலை 6:30 மணியளவில், தனக்குச் சொந்தமான பசு ஒன்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். காட்டுதேவாத்துார் பேருந்து நிறுத்தம் அருகே, பசு சாலையைக் கடந்தது. அப்போது, ஜல்லி ஏற்றிக் கொண்டு சித்தாமூரில் இருந்து செய்யூர் நோக்கி அதிவேகமாகச் சென்ற கல்குவாரி லாரி, பசுவின் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி, பசு உயிரிழந்தது. சித்தாமூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை