உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் மாற்றியின் கம்பங்கள் சேதம் புதிதாக மாற்றியமைக்க கோரிக்கை

மின் மாற்றியின் கம்பங்கள் சேதம் புதிதாக மாற்றியமைக்க கோரிக்கை

மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சியில், வளம் மீட்பு பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா அருகே, மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, மதுராந்தகம் துணை மின் நிலையத்திலிருந்து, பேரூராட்சி பகுதிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த மின்மாற்றில் இருந்து, 50க்கும் மேற்பட்ட மோட்டார் இணைப்புகளும், 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கான வீட்டு மின் இணைப்புகளும் உள்ளன.கடந்த ஓராண்டுக்கும் மேலாக, மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ள கம்பங்கள், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதுடன், பலம் இழந்த நிலையில் உள்ளன.இதுகுறித்து, அதிகாரிகளுக்கு பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தினர், விவசாயிகள் புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ள பழைய மின் கம்பங்களை அப்புறப்படுத்தி, புதிய கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ