தாழ்ந்து செல்லும் மின்கம்பிகளால் கல்குளத்தில் விபத்து அபாயம்
பவுஞ்சூர்':கல்குளம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.பவுஞ்சூர் அருகே கல்குளம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள குடியிருப்புகளுக்கு மின்விநியோகம் செய்யபட்டு வருகின்றன.அணைக்கட்டு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்களுக்கு நடுவே செல்லும் மின்கம்பிகள் தாழ்ந்து செல்வதால், அந்த வழியாக செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் மின் கம்பிகளில் உரசி விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.மின்வாரியத் துறை அதிகாரிகள் விபத்து ஏற்படுவதற்கு முன், தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.