கிராம உதவியாளர் காலி பணியிடம் 41 பேரை நியமிக்க முடிவு
மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் உள்ளிட்ட ஐந்து தாலுகாக்களில், காலியாக உள்ள 41 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவெடுக்கப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு தாலுகாக்கள் உள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும், பல வருவாய் கிராமங்களில், கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்நிலையில், மாநிலம் முழுதும் மூன்றாண்டுகளுக்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களில், கிராம உதவியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தில் 23, செய்யூரில் 9, வண்டலுாரில் 6, தாம்பரத்தில் 2, திருக்கழுக்குன்றத்தில் 1 என, 41 காலி பணியிடங்களில் கிராம உதவியாளர்களை நியமிக்க, மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.அந்தந்த தாலுகா பகுதியில், நிரந்தரமாக வசிக்கும், குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, 10ம் வகுப்புத் தேர்வை, தமிழை ஒரு பாடமாக கொண்டு எழுதி தேர்ச்சி பெறாத, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் உள்ளவர்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.அந்தந்த தாசில்தாரிடம், நேரடியாக அல்லது தபால் வாயிலாக, இன்று முதல், ஆக., 5ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை, https;//chengalpattu.nic.in/notice _category/recruitment/ என்ற இணைய முகவரியில் பதிவிறக்கலாம்.
* மதுராந்தகம் தாலுகா
வடக்குப்புத்துார்வேப்பங்கரணைமுருங்கைபெரும்பேர்கண்டிகைமோகல்வாடிமின்னல் சித்தாமூர்மின்னல்கீழ்மின்னல்சிறுபேர்பாண்டிகாட்டுக்கூடலுார்முனியந்தாங்கல்பெரும்பாக்கம்மொறப்பாக்கம்கடம்பூர்மாமண்டூர்உழுதமங்கலம்கத்திரிச்சேரிஈசூர்புதுப்பட்டுபில்லாந்திக்குப்பம்குன்னவாக்கம்வெண்மணிபூண்டிசித்தாமூர்* செய்யூர்தாலுகாகரும்பூர்போரூர்சித்தார்க்காடுவேப்பஞ்சேரிமுருக்கந்தாங்கல்பெருமாள்சேரிஆட்சி விளாகம்கானத்துார்புதுப்பட்டு* தாம்பரம் தாலுகாகவுரிவாக்கம்மூலச்சேரி* வண்டலுார் தாலுகாகொளப்பாக்கம்பாண்டூர்குமிழிகல்வாய்பொன்மார்சோனலுார்* திருக்கழுக்குன்றம் தாலுகாதத்தளூர்