உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலுார் பள்ளி அருகே பழுதடைந்துள்ள கட்டடத்தை இடித்து அகற்ற வலியுறுத்தல்

பாலுார் பள்ளி அருகே பழுதடைந்துள்ள கட்டடத்தை இடித்து அகற்ற வலியுறுத்தல்

பவுஞ்சூர்: பாலுார் அரசுப் பள்ளி அருகே, பழுதடைந்து இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். பவுஞ்சூர் அடுத்த பச்சப் பாக்கம் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்குட்பட்ட பாலுார் கிராமத்தில், அரசு தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி அருகே 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடம், பராமரிப்பின்றி பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. பருவமழையின் போது பலத்த காற்று வீசினால், கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழுதடைந்த கட்டடம் விஷ பூச்சிகளின் வாழ்விடமாகவும் மாறி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அருகே உள்ள குடிநீர் தொட்டியும் பழுதடைந்து, செடிகள் வளர்ந்துள்ளன. எனவே, குழந்தைகளின் நலன் கருதி, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பழைய பள்ளி கட்டடம் மற்றும் குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !