உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு 26 வீடுகள் இடித்து அகற்றம்

கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு 26 வீடுகள் இடித்து அகற்றம்

திருவேற்காடு:திருவேற்காடு, கோலடி ஏரி 169 ஏக்கர் பரப்பளவு உடையது. இதை ஆக்கிரமித்து 200க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, ஏரியின் பரப்பளவு 112 ஏக்கராக குறைந்துள்ளது.ஏரியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, பூந்தமல்லி வருவாய் துறையினர் முடிவு செய்தனர். அங்கு ஆய்வு மேற்கொண்டதில், 26 கட்டடங்கள், புதிதாக கட்டப்பட்டு வருவது தெரிந்தது.இதையடுத்து, அந்த வீடுகளை அகற்ற, முறையாக 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. நேற்று முன்தினம், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஏழு வீடுகள், வருவாய் துறையால் இடித்து அகற்றப்பட்டன.இரண்டாவது நாளான நேற்று, மீதமுள்ள கட்டடங்களை இடித்து அகற்ற, வருவாய் துறையினர் வந்தனர்.இதற்கு, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். பின், அதிகாரிகள் மற்றும் போலீசாரை கண்டித்து, 300க்கும் மேற்பட்டோர் கோலடி சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை