உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிவுநீர் கலக்கும் ஏரியில் இருந்து குடிநீர் வினியோகிப்பதால் சீர்கேடு

கழிவுநீர் கலக்கும் ஏரியில் இருந்து குடிநீர் வினியோகிப்பதால் சீர்கேடு

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி 21வது வார்டில் நரசிங்கபுரம் காலனி, செங்குன்றம், இந்திரா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.இந்த வீடுகளுக்கு அருகில் உள்ள செங்குன்றம் ஏரியில் நகராட்சி சார்பில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த ஏரியை சுற்றியுள்ள வணிக கட்டடங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுமோ என இப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:கழிவுநீர் கலக்கும் ஏரியில் இருந்து வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்படுவதால் சுகாதாரம் கேள்வி குறியாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து துாண்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதை சுத்தம் செய்து பல ஆண்டுகளாகின்றன.இதன் காரணமாக தண்ணீரை பயன்படுத்த அச்சமாக உள்ளது. சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படும் இந்த தண்ணீருக்கு நகராட்சி குடிநீர் வரி விதித்து வருகின்றனர்.இதே நகராட்சியில் மற்ற சில வார்டுகளில் பாலாற்று குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வார்டு மக்களுக்கும் ஒரே வரி எங்களுக்கும் ஒரு வரி என்பது முறையாக இல்லை.எனவே எங்கள் பகுதியில் சுகாதாரமான குடிநீரான பாலாற்று தண்ணீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ