உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாவட்ட அளவிலான கேரம் தபால் துறை வீரர் சாம்பியன்

மாவட்ட அளவிலான கேரம் தபால் துறை வீரர் சாம்பியன்

சென்னை, சென்னை மாவட்ட அளவிலான கேரம் போட்டியில், தபால்துறை வீரர் பாரதிதாசன் முதலிடம் பிடித்தார்.சென்னை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் அம்பேத்கர் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து, ஏழாவது மாவட்ட அளவிலான கேரம் போட்டி, வில்லிவாக்கத்தில் நடந்தது. போட்டியில், சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆண்களில் 144 பேரும், பெண்களில் 12 பேரும் பங்கேற்றனர். போட்டிகள் முடிவில், ஆண்களில், தமிழக தபால்துறை வீரர் பாரதிதாசன் முதலிடம் பிடித்தார். அவரை தொடர்ந்து, எஸ்.எஸ்.கே.டி., அகாடமியின் இதாஸ் இரண்டாம் இடம் பிடித்தார். கிராண்ட் ஸ்லாம் கேரம் அகாடமியின் அப்துல் ஆசிப் மற்றும் அக்கவுண்ட்ஸ் ஜெனரல் துறையின் ராஜா ஆகியோர், முறையே மூன்று, நான்காம் இடங்களை தட்டிச் சென்றனர்.பெண்களில் செரியன் நகர் அகாடமியின் பர்கத் நிஷா முதலிடம், கிராண்ட் ஸ்லாம் கேரம் அகாடமியின் சோபிகா இரண்டாமிடம், செரியன் நகர் அகாடமியின் சஹானா மூன்றாடம் இடம், கிராண்ட் ஸ்லாம் அகாடமியின் ஜோதி நான்காம் இடத்தையும் கைப்பற்றினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை