உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தீப்பற்றிய வைக்கோல் லாரியை ஏரியில் விட்டு அணைத்த டிரைவர்

தீப்பற்றிய வைக்கோல் லாரியை ஏரியில் விட்டு அணைத்த டிரைவர்

செய்யூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், 40; டிரைவர். இவர் நேற்று, லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்றார்.பவுஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பெட்ரோல் 'பங்க்' அருகே லாரியை நிறுத்தி, மதிய உணவு சாப்பிடச் சென்றுள்ளார்.அப்போது, சாலை அருகே இருந்த மின் கம்பிகள் உரசியதில் தீப்பொறி விழுந்து, லாரியில் இருந்த வைக்கோல் தீப்பற்றி எரியத் துவங்கி உள்ளது.இதையறிந்த லாரி டிரைவர் யுவராஜ், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தார். அது முடியாததால், அங்கிருந்தோரிடம் அருகில் எங்கு ஏரி உள்ளது எனக் கேட்டறிந்து, அருகே இருந்த கடுகுப்பட்டு ஏரியில் லாரியை இறக்கினார்.பின், 'பொக்லைன்' இயந்திரத்தை வரவழைத்து, லாரியில் இருந்து தீப்பற்றிய வைக்கோல் கட்டுகளை மட்டும் எடுத்துவிட்டு, மற்றவற்றை கொண்டு சென்றுள்ளார்.லாரி டிரைவரின் சாதுர்யத்தால் பெட்ரோல் 'பங்க்' அருகே ஏற்பட இருந்த பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி