தாறுமாறாக கார் ஓட்டிய போதை ஆசாமிகள்
தாம்பரம்:மேற்கு தாம்பரம், ஹிந்து மிஷன் மருத்துவமனை சாலையில், காரை தாறுமாறாக ஓட்டி சென்ற போதை ஆசாமிகள், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை இடிப்பது போல் சென்றனர்.இதை தட்டி கேட்ட அந்த இளைஞரை, காரில் வந்த நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, அந்த காரை அங்கிருந்தோர் மடக்கி பிடித்து, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தாம்பரம் போலீசார், காரில் வந்த மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார், 30, உள்ளிட்ட நான்கு பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.