மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி
03-Sep-2024
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இயங்கும் அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவ - மாணவியரிடம், மாமல்லபுரம் போலீசார், போதை தடுப்பு விழிப்புணர்வு முகாமை நேற்று நடத்தினர்.போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கல்லுாரி மாணவ - மாணவியர், போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தவிர்ப்பது, நண்பர்கள் உள்ளிட்டோர் வாயிலாக, இப்பழக்கம் ஏற்படுவது, போதையால் ஏற்படும் தீமைகள், தனிமனிதன் மட்டுமின்றி, குடும்பம், சமூகம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை குறித்து விளக்கினர்.போதையை தவிர்க்குமாறும், நெருங்கிய வட்டாரத்தில் போதைக்கு அடிமையானவர்கள் குறித்து தெரிவிக்கவும், போதை பழக்கத்திலிருந்து மீட்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
03-Sep-2024