மாணவர்களுக்கு கல்வி உபகரணம்
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 250 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளியில், த.வெ.க., தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், புத்தக பை உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கட்சி நிர்வாகிகள் வீரா, ஹேமா ஆகியோர் தலைமை வகித்து, அவர்களின் சொந்த செலவில் நோட்டு புத்தகம், புத்தக பை, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை, 250 மாணவ - மாணவியருக்கு வழங்கினர்.நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தீனா, தியாகு உட்பட பலர் பங்கேற்றனர்.