மேலும் செய்திகள்
சாலையை கடந்த தொழிலாளி பைக் மோதி உயிரிழப்பு
14-Oct-2025
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகே, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனம் மோதி, முதியவர் உயிரிழந்தார். சிங்கபெருமாள் கோவில் அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், 74. இவர் நேற்று காலை, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், சேந்தமங்கலம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் நோக்கிச் சென்ற,'டாடா ஏஸ்' சரக்கு வாகனம், சண்முகம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, அவசர கால 108 ஆம்புலன்ஸ் மூலமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து, பாலுார் போலீசார் வழக்கு பதிந்து, தப்பிச் சென்ற 'டாடா ஏஸ்' வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
14-Oct-2025