உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாம்பு கடித்து முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

பாம்பு கடித்து முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த சென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி,55, பாம்பு பிடிக்கும் உரிமம் வைத்துள்ள இவர், கடந்த 14ம் தேதி தன் வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில், பாம்பு பிடிக்க சென்றார்.அப்போது, எதிர்பாராத விதமாக மாரியை கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது.அங்கிருந்தோர் மாரியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை மாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செங்கப்பட்டு தாலுகா போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை