உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மரக்கட்டையால் மின்கம்பிக்கு முட்டு மின்வாரியத்தினர் புது டெக்னிக்

மரக்கட்டையால் மின்கம்பிக்கு முட்டு மின்வாரியத்தினர் புது டெக்னிக்

செய்யூர்,செய்யூர் அருகே குருவாபதன்மேடு கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு நல்லுார் துணை மின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால், அப்பகுதி வழியே செல்லும் வாகனத்தின் மீது மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அபாய நிலை இருந்தது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், மின்வாரிய ஊழியர்கள் மரக்கட்டைகள் கொண்டு மின் கம்பிகளை உயர்த்தி அமைத்தனர். மின்கம்பிகளை சீரமைக்காமல், மரக்கட்டை மூலம் முட்டு கொடுத்திருப்பது, அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், மின்கம்பிகளை தாங்கி நிற்கும் மரம் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன், தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை