முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கூட்ட அரங்கில், முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில், சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் வேலை வாய்ப்பு, தொழில் முனைவோர் கருத்தரங்கம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நடந்தது.இந்த கூட்டத்தில், திருமண உதவித்தொகை, ஒரு பயனாளிக்கு, 25,000 ரூபாய் மற்றும் சிறார் கல்வி மேம்பாட்டு திட்டத்தில், ஐந்து பயனாளிகளுக்கு 65,000 ரூபாய், கல்வி உதவித்தொகை என, 90,000 ரூபாயை, கலெக்டர் வழங்கினார்.முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் சீனிவாசன், தொழில் மைய பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் ராஜா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தணிகைவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.