உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வேடந்தாங்கல் பறவைகள் உணவுக்கு ஏரியில் மீன் குஞ்சுகள் விட எதிர்பார்ப்பு

 வேடந்தாங்கல் பறவைகள் உணவுக்கு ஏரியில் மீன் குஞ்சுகள் விட எதிர்பார்ப்பு

மதுராந்தகம்: வேடந்தாங்கல் ஏரியில், பறவைகளின் உணவு தேவைக்காக, மீன் குஞ்சுகள் விட வேண்டுமென, பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மதுராந்தகம் அருகே வேடந்தாங்கலில், பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம் அமைந்துள்ள ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்ட இந்த ஏரியில், தற்போது, 12 அடி தண்ணீர் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து நத்தைகொத்தி நாரை, பாம்பு தாரா, சாம்பல் நாரை, நீர்க்காகம், புள்ளிமூக்கு வாத்து, கூழைக்கடா, கரண்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகைகளில், 25,000க்கும் மேற்பட்ட பறவைகள், தற்போது வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்துள்ளன. இதில் ஒரு சில பறவை இனங்கள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து அடைகாத்து வருகின்றன. விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், சுற்றுலாப் பயணியர் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் உணவு தேவைக்காக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் விவசாய வயல்வெளி பகுதிகளில் சென்று உணவு தேடுகின்றன. தற்போது, ஒரு சில பறவை இனங்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து அடைகாத்து வருவதால், உணவு தேவை அதிகரிக்கிறது. பறவைகள் நீண்ட துாரம் உணவு தேடிச் சென்றால், மீண்டும் இதனால், பறவைகளின் உணவு தேவை கருதி, வனத்துறையின் மூலமாக, வேடந்தாங்கல் சரணாலய ஏரியில் மீன் குஞ்சுகள் விட்டு பராமரிக்க வேண்டுமென, பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ