உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சித்தேரி தாங்கல் ஏரி சீரமைப்பு பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

சித்தேரி தாங்கல் ஏரி சீரமைப்பு பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

ஊரப்பாக்கம், சித்தேரி தாங்கல் ஏரி சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரப்பாக்கம் ஊராட்சி, ஜி.எஸ்.டி., சாலையில் 1 ஏக்கர் பரப்பில், சித்தேரி தாங்கல் ஏரி உள்ளது. சுற்றுப்பகுதியில் மழை பெய்யும் போது, இந்த ஏரியில் நீர் தேங்கும். தவிர, ஜி.எஸ்.டி., சாலையில் வழிந்தோடும் மழை நீரும் இந்த ஏரியில் தேங்கும். இதனால், சுற்றுப் பகுதி நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க, இந்த சித்தேரி தாங்கல் ஏரி உதவியது. இந்நிலையில், 30 ஆண்டுக்கும் மேலாக ஏரி பராமரிக்கப்படவில்லை. தொடர் ஆக்கிரமிப்பு காரணமாக ஏரியின் பரப்பும் சுருங்கி வந்தது. எனவே, ஏரியை சீரமைத்து, பாதுகாக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து, 2021-22 நிதியாண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலமாக, ஏரிக்கரையை பலப்படுத்தவும், நடைபாதை அமைக்கவும், 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டன. ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. மூன்று ஆண்டுகளாக பணிகள் முடிவடையவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊரப்பாக்கம், சித்தேரி தாங்கல் ஏரி சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி