உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் சலுகை பெறலாம்

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் சலுகை பெறலாம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில், விவசாயிகள் பல்வேறு சலுகைகள் பெற்றுக்கொள்ளலாம்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், அவரது குடும்பத்தினர், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 2011ல் , உழவர் பாதுகாப்பு அட்டை, உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள். கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து நிவாரணம், தற்காலிக உடல் திறனற்ற காலத்திற்கான மாதாந்திர உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ஆகியவை பெற்றுக்கொள்ளலாம்.இத்திட்டத்தின் கீழ் உழவர் அட்டை வைத்துள்ள பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரிடம் மனு அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை