உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுதல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

கூடுதல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு கூடுதலாக தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என, கலெக்டர் சினேகாவிடம், விவசாயிகள் மனு அளித் துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், இந்தாண்டு சொர்ணவாரி பருவத்தில், 1 லட்சம் ஏக்கருக்கும் மேல் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு, வரும் செப்டம்பரில் அறுவடைக்கு வர உள்ளது.கடந்த ஆண்டு, தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட போது, நீண்ட நாட்கள் காத்திருந்து விவசாயிகள் நெல் விற்பனை செய்தனர். ஆனால், விவசாயிகளுக்கு நெல்லுக்கான பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனடி பணத் தேவை ஏற்பட்டதால், சில விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் தங்களது நெல்லை, குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். இதன் காரணமாக பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக, விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி அதிகமாக செய்யப்பட்டுள்ளதால் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என, கலெக்டர் சினேகாவிடம், விவசாயிகள் மனு அளித்துள்ளனர். விவசாயிகள் மனுவில் கூறியுள்ளதாவது: கடந்தாண்டை விட கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், அரசியல் தலையீடு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நெல் வியாபாரிகள் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உடனுக்குடன் நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை், அரசியல் தலையீடு இல்லாமல் நடத்த வேண்டும். நெல் விற்பனை செய்வதற்கு, விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவதை தவிர்க்க வேண்டும். தொடர் கண்காணிப்பில், உயரதிகாரிகள் ஈடுபட வேண்டும். - செந்தமிழ்செல்வன், விவசாயி, செய்யூர். சொர்ணவாரி பருவத்தில், நெல் சாகுபடி அதிகமாக உள்ள இடங்களை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேர்வு செய்து கொடுத்த பின், தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை