உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தெருநாய்களுக்கு கருத்தடை விவசாயிகள் வலியுறுத்தல்

தெருநாய்களுக்கு கருத்தடை விவசாயிகள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு:ஊராட்சிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், சப் - கலெக்டர் மாலதி ெஹலன் தலைமையில், நடந்தது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: சம்பா, நவரை பருவத்தில், தற்போது கிணறு, ஆற்று நீர்ப்பாசனம் மூலமாக நெல் பயிர் சாகுபடி செய்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. நெல் சாகுபடி அதிகமாக உள்ள பகுதிகளில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். ஊராட்சிகளில் தெருநாய்கள் அதிகமாக உள்ளதால் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த, கருத்தடை செய்ய, கால்நடைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையையொட்டி, ஏரி பாசன கால்வாய்கள் மற்றும் ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ