உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையில் எரியாத மின் விளக்குகளால் அச்சம்

சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையில் எரியாத மின் விளக்குகளால் அச்சம்

மேல்மருவத்துார்: சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சோத்துபாக்கத்தில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில், வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமுள்ளதால், சில ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனால் கனரக வாகன ஓட்டுநர்களும், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்களும், இரவில் அச்சமின்றி இருந்து வந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் இந்த மின் விளக்கு பழுதடைந்தது. இதில், சோத்துப்பாக்கம் பயணியர் நிழற்குடை, மேல்மருவத்துார் உயர்மட்ட பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள நான்கு உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால், சாலையை கடப்பவர்கள் போதுமான வெளிச்சம் இல்லாததால், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு, சோத்துப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பாக, புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி