சாலையோரம் குவிந்துள்ள மண் பரமன்கேணிகுப்பத்தில் அச்சம்
செய்யூர்:சென்னை -- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, கடலோர பகுதிகளின் முக்கிய போக்குவரத்து வழித்தடம்.இதன் வழியாக சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு தினமும் இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.செய்யூர் அடுத்த பரமன்கேணிகுப்பம் பகுதியில் பகிங்ஹாம் கால்வாயை கடக்கும் பாலம் உள்ளது.லாரிகளில் இருந்து சிதறும் மண், இந்த பாலத்தின் மீதுள்ள சாலை ஓரத்தில் குவியல்களாக நிறைந்து காணப்படுகிறது.இதனால், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மண் குவியலில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த சாலையோரம் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.