உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாஞ்சா நுால் அறுத்து பெண் போலீஸ் காயம்

மாஞ்சா நுால் அறுத்து பெண் போலீஸ் காயம்

சென்னை, அண்ணா நகர் மேம்பாலம் வழியாக பைக்கில் சென்றபோது, மாஞ்சா நுால் அறுத்து, அமைந்தகரை பெண் போலீஸ் காயம் அடைந்தார். புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ரம்யா, 26. இவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார். ரம்யா நேற்று முன்தினம் மாலை, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக, அண்ணா நகரை நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்றார்.பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா வளைவு மேம்பாலத்தில் ஏறும்போது, எதிர்பாராத விதமாக கழுத்தில் மாஞ்சா நுால் சிக்கியது. சுதாரித்த ரம்யா, உடனடியாக நுாலை கையில் பிடித்ததில், கையிலும், கழுத்திலும் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.நிலைத்தடுமாறி கீழே விழுந்தவரை அங்கிருந்தோர் மீட்டு, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றார்.அமைந்தகரை பகுதியில் சில நாட்களாக, காற்றாடி அதிகம் வலம் வருகிறது. இதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி