உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் அரசு கலை கல்லுாரியில் நாளை இறுதி கட்ட கலந்தாய்வு

செய்யூர் அரசு கலை கல்லுாரியில் நாளை இறுதி கட்ட கலந்தாய்வு

செய்யூர்:செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை இறுதி கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.செய்யூர் வட்டத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மே மாதம் துவங்கப்பட்டது.இந்த கல்வி ஆண்டிற்காக ஆங்கில வழி கற்றலில் மூன்று பாடப்பிரிவுகள், தமிழ் வழி கற்றலில் இரண்டு பாடப்பிரிவுகள் என ஐந்து பாடப்பிரிவுகளின் கீழ் 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. தரவரிசை வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டது.முதலாவதாக சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு கடந்த 2ம் தேதி துவங்கியது. பின் பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு 6ம் தேதி துவங்கி 12ம் தேதி நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு 16ம் தேதி துவங்கி 20ம் தேதி நிறைவடைந்தது. 146 மாணவர்கள் சேர்க்கை பெற்ற நிலையில் கல்லுாரி வகுப்புகள் 30ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.இந்நிலையில், 124 காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் இறுதிக்கட்ட கலந்தாய்வு நாளை 14ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ