உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் அரசு மருத்துவமனை ஜெனரேட்டர் அறையில் தீ விபத்து

மதுராந்தகம் அரசு மருத்துவமனை ஜெனரேட்டர் அறையில் தீ விபத்து

மதுராந்தகம்:மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர் அறையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில், நாள்தோறும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் என, 1,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று, இம்மருத்துவமனையில் உள்ள,'ஜெனரேட்டர்' அறையில் இருந்து, திடீரென புகை ஏற்பட்டு, தீப்பற்றியது.உடனே மருத்துவமனை ஊழியர்கள், மதுராந்தகம் தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்வாரிய துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர்.ஜெனரேட்டர் அறையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை