உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவிழா நடத்த அனுமதி கோரி மீனவர்கள் மனு

திருவிழா நடத்த அனுமதி கோரி மீனவர்கள் மனு

செங்கல்பட்டு:புதுப்பட்டினம் மீனவ குப்பத்தினர், அங்காளம்மன் கோவில் திருவிழா நடத்தக் கோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர்.புதுப்பட்டினம் பருவதராஜகுல கடல் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கலெக்டர் அருண்ராஜிடம், மனு அளித்தனர்.மனுவில், புதுப்பட்டினம் மீனவர் குப்பம் கிராமத்தில், நிரந்தரமாக வசித்து வருகிறோம். அங்காளம்மன் கோவிலில் மயான உற்சவம் வரும் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. புதுப்பட்டினம் ஊராட்சி சாலையில், அம்மன் வீதியுலா செல்கிறது. இதற்கு, வாயலுார் ஊராட்சியைச் சேர்ந்த உய்யாலிக்குப்பம் மீனவர்கள் தடுக்கின்றனர். வழக்கம்போல் சென்ற சாலை வழியாக, அம்மன் வீதியுலா செல்வதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீது விசாரணை செய்ய, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர்களுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ