தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல் ஐவர் கைது
ஓட்டேரி: ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் குமார், 24. தி.மு.க.,வில், எழும்பூர் தொகுதி முகவராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை, ஓட்டேரி குன்னுார் நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, முன்னால் பைக்கில் சென்ற சிலர், யஷ்வந்த் குமார் வாகனத்தை இடிப்பது போல சென்றனர். அவர்களை தட்டிக்கேட்டதால், மது போதையில் இருந்த அவர்கள், திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, யஷ்வந்த் குமாரை தாக்கினர். காயமடைந்த யஷ்வந்த் குமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்த ஓட்டேரி போலீசார், நேற்று வில்லிவாக்கம், நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஐந் து பேரை கைது செய்தனர்.